நெல்லை: திருநெல்வேலியில் 25 டன் ரேஷன் சர்க்கரையுடன் ஒரு கனரக லாரி சாலையோர கிணற்றில் சாய்ந்து மூழ்கியது.
சேலம் அருகே மோகனூர் அரசு ஆலையில் 25 டன் சர்க்கரை ஏற்றப்பட்ட கனரக லாரியை பாலமுருகன் என்பவர், திருநெல்வேலி அரசு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு ஓட்டிச் சென்றார்.
திருநெல்வேலி - மதுரை சாலை யில் தாழையூத்து அருகே உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு அந்த லாரி அதிகாலை 3 மணிக்கே சென்றுவிட்டது.
கிடங்கை காலை 10 மணிக்குத்தான் திறப்பார்கள் என்பதால் லாரியை சாலை ஓரம் நிறுத்திவிட்டு பாலமுருகன் லாரியில் தூங்கினார்.
காலையில் எழுந்தபோது லாரி கொஞ்சம் கொஞ்சமாக சாலை ஓர கிணற்றில் சாய்ந்ததைக் கண்டு திடுக்கிட்டு செய்வதறியாது பாலமுருகன் தவித்து நின்றார். லாரி கிணற்றில் முழுவதும் மூழ்கியது.
தீயணைப்பு படையினர் பாரந்தூக்கி மூலம் லாரியை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.