சென்னை: சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர பேருந்தில் கோயம்பேடு சென்றுகொண்டு இருந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணுக்குப் பேருந்தில் ஏறிய மூவர் பாலியல் தொல்லை கொடுத்தனர். அந்தப் பெண் 'காவலன்' என்ற செயலியை இயக்கினார். விரைந்து வந்த சுற்றுக்காவல் போலிசார், அந்த மூவரையும் கைது செய்தனர். ஆனந்தராஜ், 23, அருள்குமார், 23, என்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அந்த மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பேருந்தில் பாலியல் தொல்லை - வழக்கறிஞர்களுக்குச் சிறை
1 mins read

