திருச்சி: திருச்சி கோட்டை போலிஸ் நிலையம் அருகே உள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு விலையுயர்ந்த 31 சிலைகள் திருடப்பட்டன. இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளிகளான காரைக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார், 38, திருப்பத்தூரைச் சேர்ந்த தமிழரசன், 66, என்ற இருவர் திருச்சியில் இப்போது பிடிபட்டுள்ளனர். இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டு 21 பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சிலரைப் பிடிக்க போலிஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.