பாம்பை துன்புறுத்தியதாக பெண் சாமியார் கைது

காஞ்சிபுரம்: வாலாஜாபாத்தில் கழுத்தில் பாம்புடன் அருள்வாக்கு கூறிய பெண் சாமியார் கபிலா கைது செய்யப்பட்டுள்ளார். வன உயிரினமான பாம்பை துன்புறுத்திய புகாரில் பெண் சாமியார் கபிலாவை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பாம்புடன் கபிலா அருள்வாக்கு கூறிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்துள்ள வாலாஜாபாத்தில் ஸ்ரீ வடபத்ரகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலை கபிலா என்பவர் நிர்வகித்து வருகிறார்.

1999ஆம் ஆண்டில் சிறு குடிசையில் துவங்கப்பட்ட கோயில் தற்பொழுது பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது. இக்கோயிலை நிர்வகித்து வரும் கபிலா செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களிலும் அருள்வாக்கு சொல்லி வருகிறார்.

இம்மாதம் 7ஆம் தேதி வடபத்ரகாளி அம்மன் பெயரில் உள்ள ஒரு யூடியூப் சேனலில் ஒரு காணொளியைப் பதிவேற்றியுள்ளார். 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்தக் காணொளியில் உயிருள்ள ஒரு நாகப்பாம்புக்கு தோஷ நிவர்த்தி பூஜை என்று குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யப்படுவது பதிவாகி உள்ளது. மேலும் கபிலா, அம்மன் வேடமிட்டு உயிருள்ள நல்லபாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு அங்கிருப்போருக்கு அருள்வாக்கு வழங்குவதும் காணொளியில் உள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட வனவிலங்குகளைக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்திய காரணத்துக்காக கபிலாவை வனத்

துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்புகளை வீடுகளில் வளர்ப்பது, அதை வைத்து வித்தை காட்டுவது போன்றவை குற்றச் செயல்கள் ஆகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!