திருச்சி: திருச்சி மாவட்டம் நாவலூர்கொட்டப்பட்டு பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். வீட்டின் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஒப்பாயி அம்மாள், மகன் ராமமூர்த்தி, பேரன் குணசேகரன் என அடையாளம் காணப்பட்டனர். இது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில் மூவர் மரணம்
1 mins read

