சென்னை: எச்,ராஜா ஒரு பைத்தியக்காரர் என நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்கு நடிகை காயத்ரி ரகுராம் ’கூ’ என்று தனது டுவிட்டரில் பதிவிட்டு குஷ்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக தேசிய செயலரான எச்.ராஜா, மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்து தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், எச்.ராஜாவின் கருத்துக்கு நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “எச்சு ராஜா ஒரு பைத்தியம்... மற்ற யாரும் அவர் பேசுவது போல பேசமாட்டார்கள்...,” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியதோடு கிண்டலாக குஷ்புவை ‘கூ’ என்று சாடியுள்ளார். “‘கூ’ குஷ்பு நீங்கள் மற்றவர்களை பேர் சொல்லி அழைக்க முடியும்.
உங்கள் வாழ்க்கையில் மற்ற பொய்களில் இருந்து வெளிவரப்போகிறீர்கள். உங்கள் பொய்களை நான் பட்டியல் இடட்டுமா. இந்துகளை வெறுக்கிறீர்கள். பொய்யர்களான உங்களுக்கும் காங்கிரசுக்கும் புகலிடம் இல்லை,” என பதிவிட்டுள்ளார்.