மதுரை: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் 14 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுக, இலங்கைத் தமிழர்களுக்காக எந்த ஒரு கோரிக்கையையும் அரசிடம் முன்வைத்ததில்லை என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த, முன்னாள் அதிபர் ராஜபக்சேவிடம், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் பரிசுப்பொருட்கள் வாங்கியதாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் பேசியபோது அவர் சாடினார்.
“இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முதன்முதலாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசிடம் வலியுறுத்திய போது எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன.
“தற்போது முதல்வர் பழனிசாமி இதே கோரிக்கையை மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் முன்வைத்துள்ளார்,” என்றார் அமைச்சர் உதயகுமார்.