கரூர்: தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறவுள்ளது.
இதன்தொடர்பில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் கடைசி நேர காரசார பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட் டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங் களில் உள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் பலரும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.
ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் இப்போது தேர்தல் நடைபெறுவதால் கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.
கரூர் ஊரகப் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் விஜய பாஸ்கர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.
“வழக்கமாக பொங்கல் பரிசு வாங்கிக்கொண்டு வாக்கு போடு வீர்கள். நடப்பாண்டில் வாக்கு போட்டுவிட்டு பொங்கல் பரிசைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார். இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் காரசார விவா தத்தைக் கிளப்பிவிட்டுள்ளது.
இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் 60% வாக்குகளைப் பெற்றுத் தரும் வேட்பாளர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக் கப்படும் என திமுக தரப்பில் ஆசை வலை விரிக்கப்பட்டு உள்ளது.
“உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் மாவட்டத்தில் 60% இடங்களைப் பிடித்துக்கொடுங்கள். அடுத்து வரப்போகிற திமுக ஆட்சியில் உங்க ளுக்கு அமைச்சர் பதவி தரப்படும்,” என மாவட்டச் செயலர்கள், முக்கிய பிரமுகர்களிடம் மு.க.ஸ்டாலின் தரப்பு வாக்குறுதி கொடுத்துள்ளது.
சிலர் மீண்டும் திமுகவால் ஆட்சியைப் பிடிக்கமுடியுமா என சந்தேகம் எழுப்பி உள்ளனர்.