கோவை: உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் களமிறங்கியுள்ள நிலையில் கோவை மாவட்டம், நீலாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நாகர்ஜுன், 21, என்ற மாணவரும் வார்டு உறுப்பினராகப் போட்டியிடுகிறார்.
பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்துள்ள இவர் தற்போது ஊடகத் துறையில் பயின்று வருகிறார். மீம்ஸ் தயாரிப்பாளருமான நாகர்ஜுனா, 21 வயதில் யார் வேண்டுமானாலும் அரசியலில் போட்டியிடலாம் என்பதை தெரிவிக்க போட்டியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.