சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென் காசி ஆகிய 10 மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
பள்ளிகளுக்கு நீண்ட தூரம் செல்லும் மாணவ, மாணவிகளின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தோ்தல் நடக்காத 10 மாவட்டங் களைச் சோ்ந்த மாணவ-மாணவி களுக்கு மட்டும் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தோ்தல் முடிவடைந்தவுடன் இதர மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.