சென்னை: தமிழக அரசின் பொங்கல் இலவச வேட்டி-சேலை திட்டத்தில் ரூ.21 கோடியே 31 லட்சம் முறை கேடு நடந்து இருப்பதாகவும் கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி -சேலை வழங்கப்படும்.
தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்குக் கொள்முதல் செய்ததன் மூலம், 21 கோடியே 31 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக வழக்கு தொடுத்து இருப்பவர் கூறுகிறார்.