சென்னை: இலங்கை விடுதலை நாள் விழாவில் தமிழைப் புறக்கணிக்கும் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்களும் தெரிவித்துள்ளனர். அது இலங்கை தமிழர்களை அவமதிக்கும் செயல் என்றும் உலக அளவில் கடைப் பிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கு அது எதிரானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் பிப்ரவரி 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 72வது விடுதலை நாள் விழாவில், தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் இசைக்கப் படாது என்று ராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது.
இலங்கையின் தமிழைப் புறக்கணிக்கும் முடிவுக்குக் தமிழகத் தலைவர்கள் கண்டனம்
1 mins read

