கோவை: கோவை, துடியலூர் அருகே 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கின் தொடர்பில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் 7 வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப் பட்டார். பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இவ்வழக்கின் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபர் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன் றத்தில் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்துவந்தது.
நேற்று இவ்விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.
போக்சோ வழக்கில் சந்தோஷ் குமாருக்கு ஆயுள் தண்டனையும் 302 சட்டப்பிரிவின் கீழ் மரண தண் டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் தடையங்களை மறைத்த குற்றத்திற்கு அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கோவையில் போக்சோ நீதிமன்றம் அமைக்கப்பட்ட பின் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பாகும் இது.