சென்னை: உயிர் பயம் துளியும் இன்றி சர்வ சாதாரணமாக பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 158 வாலி பர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் ஓட்டிச்சென்ற பைக் குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்களில் பெரும்பாலா னோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆவர்.
இவர்களுடன் முகமூடி அணிந்த நிலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டிச்சென்ற இளம்பெண் ஒருவரும் போலிஸ் பிடியில் சிக்கியுள்ளார்.
“புத்தாண்டு தினம்வரை தொடர்ந்து இதுபோன்ற அதிரடி சோதனைகளை நடத்தி பந்தயம் கட்டி பைக் போட்டியில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று சென்னை போக்குவரத்துப் போலிசார் தெரி வித்துள்ளனர்.
சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா மேம்பாலம், ஜிஎஸ்டி சாலை, சர்தார் பட்டேல் சாலை ஆகிய சாலைகளில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான இளை ஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக போலிசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து அவர் களைக் கைதுசெய்ய சென்னை மாநகரப் போலிஸ் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.