விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. இந்திய நேரப்படி மதியம் 3 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில் 57.5% வாக்குகள் பதிவானதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

சுமார் 60,000 காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டிருந்தனர்.

27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 4,700 ஊராட்சித் தலைவர்கள், 37,830 வார்டு உறுப்பினர்கள், 2,546 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 260 மாவட்ட வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

24,680 வாக்குச்சாவடிகளில் 1.30 கோடி வாக்காளர்கள் வாக்க ளிக்க இருந்தனர். அடுத்த 2ஆம் கட்ட தேர்தல் 30ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்த தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறுகையில், “மதியம் 3 மணிவரை 57.5% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்கும் என்ற போதிலும் சில இடங் களில் சிறு சிறு பிரச்சினைகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவை சரிசெய்யப்பட்டன. இந்த தேர்தலில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,” என்று கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், பாப்ப ரம்பாக்கம் கிராமத்தில் வாக்குச்சா வடியில் ஏற்பட்ட தகராற்றின் கார ணமாக வாக்குப் பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டதால் வாக்குச்சாவடி பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சேலம், எடப்பாடி, சுகம் ஒன்றியம், சிலுவம்பாளையம் தொடக்கப்பள்ளி யில் நடந்த வாக்களிப்பில் தமிழக முதல்வர் பழனிசாமி குடும்பத்தின ருடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பெட்டிகளுக்குப் பாதுகாப்பு கோரி திமுகவினர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

வாக்குப் பெட்டிகள் வைக்கும் இடங்களில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் கண்காணிக்க அனுமதிக்கவேண்டும் என்று திமுக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு திங்க ளன்று விசாரணைக்கு வர உள்ளது.

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வாக்காளர் ஒருவர் தான் வாக்களித்த சீட்டை கைபேசியில் படம்பிடித்து வாட்ஸ்அப்பில் வெளி யிட்டதால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!