மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் பயிலும் நான்கு மாணவிகளும் அவர்களின் ஆண் நண்பர் ஒருவரும் சேர்ந்து மது அருந்துவது போன்ற காணொளிக் காட்சிகள் சமூக வலைத் தளங்க ளில் வேகமாகப் பரவி வருகின்றன.
இதைக் கண்ட வலைவாசிகள், இந்திய கலாசாரத்தை சீரழிக்கும் வேலைகளில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக பலதரப்பட்ட விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இச்சம்ப வத்தில் தொடர்புடைய மாணவர் கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள கல்லூரி நிர்வாகம் அவர்களைக் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தி னால் மனமுடைந்த மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக தகவல்கள் வெளியா கின. ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
“பெண் சுதந்திரம் என்று கூறிக் கொண்டு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இப்படி செய்வது நியாயமா? இதுபோல் மாணவர்கள் செய்தாலே தவறு என்று கருதப்படும் நிலையில் பெண் பிள்ளைகள் இப்படி எல்லாம் செய்வதா? பெண் சுதந்திரத்தை அவர்கள் வரம்பு மீற பயன்படுத்தக் கூடாது.
“ஆணாக இருந்தாலும், பெண் ணாக இருந்தாலும் சுதந்திரத்தையும் உரிமையையும் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும். பாரதியார் கண்ட புதுமைப்பெண்கள் இவர் களா? என்று கலாய்த்தும் கிண்டல், கேலி செய்தும் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்,” வலைத்தளவாசிகள்.