திருச்சி: தனது வீட்டுவாசலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு வண்ணக் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
என்ன காரணத்தால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியாத நிலையில், இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப் பாறையை அடுத்த தீராம்பட்டியில் வசித்து வருகிறார் தோல் வியா பாரியான சுப்பிரமணி. இவருடன் அவரது மனைவி சுப்புலெட்சுமியும் ஐந்து குழந்தைகளும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுப்புலெட்சுமி நேற்று விடியற்காலையில் வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் மறைந்திருந்த இரு இளைஞர்கள் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு சர மாரியாக வெட்டித் தாக்கினர்.
இதில் தலை, முகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் வெட்டுக்காயத் துடன் சுப்புலெட்சுமி ரத்த வெள் ளத்தில் வீட்டின் வாசலிலேயே கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த பால்காரர் அளித்த தகவ லின்பேரில் வெளியே வந்த சுப்பிர மணியும் அவரது குடும்பத்தினர் களும் சுப்புலெட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.