பரமத்திவேலூர்: தேர்தல் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ள 60 வயது தங்கமணி, கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு மேல் சட்டை அணியாமல் வந்து வாக்களித்துள்ளார்.
தங்கமணி கூறுகையில், “ கடந்த சில நாட்களுக்கு முன்பு போடப்பட்ட ஊர் கூட்டத்தின்போது கபிலக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ. 35 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
“மாநில, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகளையும் மாநில அரசைக் கண்டித்தும் இத்தகைய செயல்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் நான் கறுப்புத் துணியைக் கண்களில் கட்டிக்கொண்டு வந்து வாக்களித்தேன்,” எனக் கூறினார்.