13 வாக்குச் சாவடிகளில் டிசம்பர் 30ல் மறு வாக்குப்பதிவு

புதுக்கோட்டை: சின்னம் மாற்றி அச்சடிப்பு, வாக்குச் சீட்டில் சின்னமே இல்லை, சின்னம் இருந்தால் பெயர் இல்லை என நேற்று முன்தினம் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடி களும் சுவாரசிய நிகழ்வுகளும் ஏராளம் நடந்துள்ளன.

புதுக்கோட்டை அருகே 13 வாக்குச்சாவடிகளில் நாளை டிசம்பர் 30ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

விராலிமலை அருகே சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு பதிலாக மாற்று சின்னம் அச்சடிக்கப்பட்ட விவ காரம் தொடர்பில் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் மறு வாக்குப் பதிவு நடத்த உத்தர விட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட கோங்குடிப்பட்டி, பாக்குடி, பேராம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளை உள்ளடக்கிய 15வது வார்டு ஒன்றிய ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சேகர் என்ற சுயேச்சை வேட்பாளருக்கு பச்சை நிற வாக்குச்சீட்டில் ஒதுக்கப்பட்ட ஸ்பேனர் சின்னத்துக்கு பதிலாக ஸ்குரூ சின்னம் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக அப்பகுதியில் 13 வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு சுயேச்சை வேட்பாளர் சேகர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் நாளை 30ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடத்த உத்தரவு பிறப்பித் ்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!