வாடா மலராய் வயது முழுக்க வந்த காதல்; வாலிபம் போன பின்னர் வசந்தம் வந்தது

வாடா மலராய் வயது முழுக்க வந்த காதல்; வாலிபம் போன பின்னர் வசந்தம் வந்தது

1 mins read
0cd2cf56-8663-46e6-87df-d488046b576a
65 வயது மூதாட்டி தனது 20 ஆண்டு கால நண்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்திருமண நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். படம்: ஊடகம் -

திருச்சூர்: 65 வயது மூதாட்டி தனது 20 ஆண்டு கால நண்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்திருமண நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுமணத்தம்பதிகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்துவிட்டார்.

முன்னதாக, மரணப்படுக்கையில் இருந்த கணவர், தமது மனைவி லட்சுமி அம்மாளை கடைசி வரைக் கவனித்துக்கொள்ளும்படி கோச்சானியன் என்பவரிடம் கூறினார்.

அதன்படி கடந்த 21 ஆண்டுகளாக லட்சுமி அம்மாளுக்கு பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார் கோச்சானியன். இத்தனை ஆண்டு காலமாக நீடித்த நட்பின் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட இருவரும் திருமணம் செய்துகொள்வது என முடிவெடுத்தனர். இதையடுத்து திருச்சூரில் உள்ள அரசு முதியோர் இல்லம் இவர்களது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தது. முதியோர் இல்ல கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப் படத்தை சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.