கடைக்காரரே ஊசிபோட்டதால் மருந்து வாங்க போனவர் மரணம்

கடைக்காரரே ஊசிபோட்டதால் மருந்து வாங்க போனவர் மரணம்

1 mins read

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற கைம்பெண், சளிக் காய்ச்சலுக்கு மருந்து வாங்கிவருவதற்காக கீழப்புலியூர் கிராமத்திலுள்ள மருந்துக் கடைக்குச் சென்றார். கதிரவன் என்ற கடை உரிமையாளர், தமிழ்ச்செல்விக்குச் சில மருந்துகளைக் கொடுத்து ஊசிபோட்டார். உடனே மயக்கம் அடைந்து கீழே விழுந்த தமிழ்ச்செல்வி கடைக்குள்ளேயே உயிரிழந்தார். போலி மருத்துவர் கதிரவனைக் கைது செய்து போலிஸ் அவரை விசாரிக்கிறது.