செங்குன்றம்: சென்னையில் துணை நடிகரைக் கொலை செய்த துணை நடிகையையும் அவரது கணவர், தங்கை, தங்கை கணவர் ஆகிய நால்வரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் ரவி, 38. இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார். வடபழனியில் தங்கி சினிமா வாய்ப்புகளைத் தேடிய வருக்குத் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 10க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
அப்போது அவருக்கு தொலைக் காட்சித் தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்த தேவி, 42, என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து நட்பாகப் பழகினார்.
நாளடைவில் இந்த நட்பு முறை யற்ற காதலாக மாறியதாகவும் இரு வரும் அடிக்கடி தனிமையில் சந் தித்து உல்லாசமாக இருந்துவந்த தாகவும் கூறப்படுகிறது.
தேவிக்கு ஏற்கெனவே திருமண மாகி கணவரும் இரு மகன்களும் உள்ளனர்.
தேவி ‘நாயகன்’ படத்தில் துணை நடிகையாக நடித்தவர். இவர் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கும் ரவிக்கும் இருந்து வந்த முறையற்ற உறவு குறித்து தேவியின் கணவர் சங்கர் கண்டித்துள்ளார்.
இதையடுத்து வடபழனியில் இருந்து கொரட்டூருக்கு தேவியின் குடும்பம் இடம்பெயர்ந்துள்ளது. இருப்பினும் ரவி தேவிக்கு கைபேசி யில் தொல்லை கொடுத்து வந் துள்ளார்.
இதையடுத்து தேவியின் தங்கை லட்சுமியைச் சந்திக்கவேண்டும் என்று கூறிய ரவி, லட்சுமி வர வில்லை என்றால் அவரது மகனைக் கடத்திவிடுவேன் என்றும் மிரட்டி யுள்ளார்.
இந்நிலையில் கொளத்தூரில் உள்ள லட்சுமி வீட்டுக்குச் சென்ற ரவி குடிபோதையில் அவரிடம் அத்துமீறியுள்ளார். அப்போது அங்கு வந்த தேவி, அவரது கணவர் சங்கர், லட்சுமி, லட்சுமியின் கணவர் சவரியார் ஆகியோர் ரவியைத் தாக்கியுள்ளனர். தேவி சுத்தியலால் ரவியைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் பதறிப்போன அவர்கள் நால்வரும் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ரவியின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரி சோதனைக்காக அனுப்பிவைத்தனர்.