தேர்தல் செலவை சமூக ஊடகத்தில் பதிவிட்ட வேட்பாளர்

தேர்தல் செலவை சமூக ஊடகத்தில் பதிவிட்ட வேட்பாளர்

1 mins read

மதுரை: உள்ளாட்சித்தேர்தலில் மேலூர் ஒன்றிய மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நாம் தமிழர் வேட்பாளராக கா.மணிக்குமார் போட்டியிட்டார். தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு ஆன செலவுக் கணக்குகளை புள்ளி விவரத்துடன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைப்புத் தொகையாக ரூ.1,000, வேட்புமனு வகையில் ரூ.1, பத்திரம் வாங்க ரூ.20, மனு தயாரிப்பதற்காக ரூ.500, வழக்கறிஞர் கட்டணம் ரூ.500, துண்டறிக்கைக்காக ரூ.1,950, பதாகைக்காக ரூ.300, இரு சக்கர வாகன எரிபொருளுக்கு ரூ.600, உணவிற்காக ரூ.350, தேநீருக்காக ரூ.150 உள்பட மொத்தம் ரூ.5,371 செலவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.