சென்னை: குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக கவுதமி களம் இறங்கி உள்ளார். இது குறித்து பேசிய அவர் இந்தச் சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் சிலர் எதிர்ப்பதாக கூறியுள்ளார். கவுதமி கூறிய அந்த சிலரில் நடிகர் கமல்ஹாசனும் அடங்குவார். அந்த சட்டத்திற்கு எதிராக கமலின் மக்கள் நீதி மய்யம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இந்த நிலையில்தான் கமலுக்கு எதிராக கவுதமி பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் விமர்சகர்களும் கூட கவுதமி பேசியவை பொதுவாக இருந்தாலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் கமலை சீண்டக்கூடிய வகையில் இருக்கிறது என்கிறார்கள்.
பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் கமலை விமர்சிக்க கவுதமியை அந்தக் கட்சி களம் இறக்கியுள்ளதாக சொல்கிறார்கள். விரைவில் கவுதமிக்கு பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.