நெல்லை: பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக நெல்லை கண்ணன் (படம்) மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என நெல்லை கண்ணன் பேசியது குறித்து காங்கிரஸ் மேல் சந்தேகம் இருப்பதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சூட்டை கிளப்பிவிட்டுள்ள நிலையில், இதுகுறித்த விளக்கம் ஏதும் அளிக்காமல் நெல்லை கண்ணன் எங்கோ தலைமறை வாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
நெல்லை மேலப்பாளையத்தில் இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்தினைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசியபோது, பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியு ள்ளார் என கூறப்படுகிறது. இத னால் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவர் பேசினார் என கூறி, பாஜக தரப்பில் போலிசில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கொலை செய்யவேண்டும் என பேசுமளவுக்கு நெல்லை கண்ண னுக்கு துணிச்சல் எப்படி வந்தது. இது நெல்லை கண்ணனின் கருத்து மட்டுமா அல்லது காங்கிரசே பிரதமரைக் கொல்ல சதி செய்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு உடனடியாக நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.