சென்னை: இன்று 2020 ஆங்கிலப் புத்தாண்டு. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இந்தத் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மீண்டும் விநியோகிக்கப்பட உள்ளது.
அரிசி ரேஷன் அட்டை வைத் துள்ள ஒவ்வொரு குடும்பத்தின ருக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பு தெரிவித்துள்ளது.
இந்த தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடித்துண்டு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 27 மாவட் டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.
இந்தத் தேர்தலின்போது விதி முறைகளை மீறக்கூடாது என்பதற் காக கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி துவங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டது.
இந்நிலையில், மீண்டும் இந்த பரிசுத்தொகுப்பை வரும் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் வழங்கி விட தமிழக அரசு அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கவேண்டும் என்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பும் ரூ.1,000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து உணவு வழங்கல் துறை ஆணையர் எஸ். மதுமதி நேற்று அனுப்