கொடைக்கானல்: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பெண் ஒருவர், அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் ரூபாய் ஊதியம் தந்த வேலையைத் துறந்துவிட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கி அசத்தி வருகிறார்.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் பிரியா. தனது கணவர் வர்தேஷ்சுடன் 2000ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் வருமானத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அந்த அமெரிக்க வேலையை உதறிவிட்டு, கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள காமனூரில் 80 ஏக்கர் நிலத்தினை வாங்கினார்.
இந்த நிலத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். கீரைகள், பீன்ஸ், கேரட், முட்டை கோஸ் மற்றும் பல்வேறு மரங்களையும் வளர்த்து குறைந்த விலைக்கு விற்பனை செய்துவருகிறார். விரைவில் ஒருங்கிணைந்த விற்பனை மையம் அமைக்க உள்ளதாக சொல்லும் பிரியாவை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.