கனமழை மேலும் 4 நாட்கள் நீடிப்பு

1 mins read

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. எழும்பூர், புரசைவாக்கம், செண்ட்ரல், கோடம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், பல்லாவரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மழைநீர் தாழ்வான இடங்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இன்னும் 4 தினங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.