திருநெல்வேலி: குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியில் டிசம்பர் 29ஆம் தேதி நடந்த ஒரு மாநாட்டில், பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக பேசிய நெல்லை கண்ணன் கைதாகி, மருத்துவ சோதனை முடிந்த பிறகு நேற்று நெல்லை நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அவரை ஜனவரி 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நேற்று நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது. பிணை கிடைக்காத பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இதனிடையே, கண்ணனைக் கைது செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்திய எச் ராஜா உள்ளிட்ட 311 பாஜகவினர் மீது போலிஸ் வழக்குப் பதிந்தது.