அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அடுத்த அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த சாமிநாதன் என்பவர் ஒரு நாயின் மீது மோதிவிட்டார்.
அதைப் பார்த்ததும் நாயின் உரிமையாளரான ராஜேந்திரன் என்பவர் சாமிநாதனிடம் தகராறு செய்தார். அப்போது ராஜேந்திரனை சாமிநாதன் கீழே தள்ளிவிட்டார். அதே இடத்தில் ராஜேந்திரன் மாண்டுவிட்டார்.
போலிஸ் சாமிநாதனைக் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.