நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் களப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராணி, 45, என்பவர், பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு மயக்க லட்டு கொடுத்து நகை திருடிவந்தார்.
அவர் 6 மாதங்களுக்கு முன் ஒரு பேருந்தில் பார்வதி என்ற மாதுக்கு மயக்க லட்டு கொடுத்து 8½ பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றார்.
அதே மாதிடம் திரும்பவும் கடந்த செவ்வாய்க்கிழமை திருட வந்தபோது ராணி சிக்கினார். ராணி எத்தனை பேருக்கு லட்டு கொடுத்து இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க போலிஸ் அவரை விசாரிக்கிறது.