இரண்டு மனைவிகளும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; பூரிப்பில் விவசாயி

தன்னுடைய இரண்டு மனைவிகளும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையடுத்து மாலையும் கழுத்துமாக மனைவிகளின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார் விவசாயி ஒருவர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள வழுவூர் - அகரம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தனசேகர். அவருக்கு செல்வி, காஞ்சனா என இரண்டு மனைவிகள்.

தனசேகரன் ஏற்கெனவே ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். அதேபோல, செல்வியும் ஏற்கெனவே வழுவூர் - அகரம் கிராம ஊராட்சியின் தலைவராக இருந்திருக்கிறார். அதனால் தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வழுவூர் - அகரம் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு செல்வி போட்டியிட்டார்.

அதேபோல, காஞ்சனாவின் சொந்த ஊர் கோவில்குப்பம் சாத்தனூர். அங்கு இவருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் அங்கு ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால், தனசேகருக்கு வழுவூர் - அகரம், கோவில்குப்பம் சாத்தனூர் தொகுதிகளில் செல்வாக்கு அதிகம்.

இரண்டு கிராமங்களிலும் அதிரடியாக தேர்தல் வேலை செய்து இரு மனைவிகளுக்கும் வாக்கு சேகரித்தார் தனசேகர். வந்தவாசி ஒன்றியத்தில் கடந்த 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில், தனசேகரனின் 2 மனைவிகளுமே அபார வெற்றி பெற்று தலைவிகளாகி உள்ளனர். பூரிப்பில் இருக்கும் தனசேகருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!