ஆளை மறைக்கும் 6 அடி மாப்பிள்ளை சம்பா

ஆளை மறைக்கும் 6 அடி மாப்பிள்ளை சம்பா

1 mins read
60361fe1-d4a8-4a8d-8051-8106f95d809a
வயலில் உரம் ஏதும் போடாமல் வளர்த்த மாப்பிள்ளை சம்பா நெற்பயிர் 123 நாட்களில் ஆளையே மறைக்கும் அளவுக்கு  6 அடி உயரம்வரை வளர்ந்துள்ளது. படம்: தமிழக ஊடகம் -

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 60.

இந்த விவசாயி, தன் வயலில் உரம் ஏதும் போடாமல் வளர்த்த மாப்பிள்ளை சம்பா நெற்பயிர் 123 நாட்களில் ஆளையே மறைக்கும் அளவுக்கு 6 அடி உயரம்வரை வளர்ந்துள்ளது.

ஒவ்வொரு கதிரிலும் 400க்கும் மேற்பட்ட நெல்மணிகள் விளைந்துள்ளன.

அதை விவசாயிகளும் பொது மக்களும் பார்த்து வியந்து படம் எடுத்துச் செல்கிறார்கள்.

இன்னும் ஏறக்குறைய ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம் என்று சீனிவாசன் தெரிவித்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்