சேலம்: நெல்லை கண்ணன் நேற்று காலை மதுரை சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறந்த ஆன்மிக, இலக்கிய சொற்பொழிவாளரான நெல்லை கண்ணன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நெல்லை கண்ணன் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப்பெறுவதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தி உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “நெல்லை கண்ணன் கைது நட வடிக்கை தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக அரசா? பாஜக அரசா?” என்ற கேள்வியை எழுப்புவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, நெல்லை கண்ணனைப் பெரம்பலூர் தனியார் விடுதியில் போலிசார் கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லை நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்தினர். வரும் 13ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.