ஆலத்தூர்: தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது அவரது குடும்பத்தினர், பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மணிவேல், 70, என்பவர் போட்டியிட்டார். -இவர் முன்னாள் திமுக எம்எல்ஏவான வெண்கலமணியின் சகோதரர் ஆவார்.
இந்நிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்ட மணிவேல், தனது ஆதரவாளர்களுடன் வீட்டிற்குச் சென்றார். அதன்பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு மணிவேல் இறந்ததாகத் தெரிகிறது.