திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை யின்போது போடப்பட்டிருந்த செல்லாத வாக்குகள் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்தியது.
இருவரிடம் வாங்கிய பணத்திற்கு ஆளுக்கு ஒரு ஓட்டை குத்தியதாக வடிவேல் கூறுவார். இந்த காட்சியைப் போல செல்லாத வாக்குச்சீட்டுகள் பலவற்றில் சில வாக்காளர்கள் இருவருக்கும் வாக்களித்திருந்தனர். சிலர் வேட்பாளரின் பெயர் அல்லது சின்னத்தில் பேனாவால் ‘டிக்’ அடித்திருந்தனர். சிலர் கையெழுத்துகளைப் போட்டிருந்தனர். மேலும் சிலர் சின்னத்திற்கு நேராக விரல் ரேகைகளையும் பதிவு செய்திருந்தனர்