ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வார்டில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமலிங்கம்
7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அறிந்து மயங்கி விழுந்தார். இவருக்கு வெற்றிபெற்ற வேட்பாளர் சதீஷ்குமார் முதலுதவி செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனால் பலரும் சதீஷ்குமாரை பாராட்டி வருகின்றனர்.
மீண்டும் ஒருமுறை வாக்குகளை எண்ணவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் எண்ணினர். அப்போதும் ராமலிங்கத்தை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட சதீஷ்குமார் 7 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டது.