சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வரவேற் கிறோம். மக்கள் அளித்த தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்த நிலையில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் சேலம் மாவட் டத்தில் மொத்தமுள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுக 13 இடங்களைக் கைப்பற்றியது.
முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியின் சொந்த ஊராட்சி ஒன்றி யமான எடப்பாடியின் அனைத்து வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது.
மொத்தம் 91,975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல் கட்டத் தேர்தலில் 76.19% வாக்குகளும் இரண்டாவது கட்டத் தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை 315 மையங்களில் கடந்த இரு நாட்க ளாக தொடர்ந்தது.
இந்நிலையில், “உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றியைப் பறிக்க அதிமுக முயன்று வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் செய்தியாளர் களிடம் கூறுகையில், “வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. தலைமை யிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 85%க்கு மேல் எங்களுடைய கூட்டணி எல்லா இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
“இந்த வெற்றியை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக அரசு அதிகாரிகள், போலிசாரின் துணை யோடு திட்டமிட்டு சதி செய்து பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வரு கின்றனர். இப்போது திமுகவின் வெற்றியைத் தடுக்கப் பார்ப்பதால் தான் நீதிமன்றத்தை நாட உள்ளோம். முன்னர் முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்றுதான் நீதி மன்றத்திற்குச் சென்றோம்,” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.