கிரிக்கெட் வீரர்போல் வெள்ளை பேண்ட், சட்டை, தொப்பி அணிந்து வந்திருந்த முதல்வா் பழனிசாமி சென்னை மாநில கல்லூரியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து கிரிக்கெட் விளையாடினார். அமைச்சர் ஜெயகுமார் பந்து வீச, பழனிசாமி அதை எதிர்கொண்டு பந்தடித்தார். இதை மற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரசித்தனர்.
இந்தப் போட்டி குறித்து முதல்வர் கூறுகையில், “உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவ்வப்போது ஏதாவது ஒரு விளையாட்டில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம். மன அழுத்தத்தை போக்க விளையாட்டு அவசியம்,” என்று அவர் தெரிவித்தார். படம்: ஊடகம்