ஆம்பூர்: ஆம்பூர் அருகே மகப்பேற்றுக்காக மருத்துவமனைக்கு மருத்துவ அவசர வாகனத்தில் சென்ற பெண்ணுக்கு வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் மகப்பேற்றுக்கு உதவியுள்ளனர். இந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வயல்வெளியில் மகப்பேற்றுக்கு உதவிய பெண்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 25. இவரது மனைவி சோனியா, 22. இவர்களுக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில் நேற்றுகாலை சோனியா வுக்கு மகப்பேறு வலி ஏற்பட ரகுநாதபுரம் அருகே ஆம்புலன் சில் சென்றபோது அவரது மகப்பேறு வலி கடுமையானது. இதையடுத்து சாலையோரம் மருத்துவ அவசர வாகனம் நிறுத்தப்பட்டது. அங்கு விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்கள் சோனியாவுக்கு பிரசவம் பார்த்தனர்.