விருத்தாச்சலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிள்ளையை ஈன்றெடுத்த பிரியா என்ற பெண் உயிரிழந்ததையடுத்து அவரது உறவினர்கள் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம், கலர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா, மகப்பேறுக்காக விருத்தாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகப்பேறுக்குப் பின் உயிரிழந்த பெண்; உறவினர்கள் போராட்டம்
1 mins read

