சென்னை: அதிமுகவின் கூட்ட ணிக்குள் பாமகவும் முக்கிய அங்கமாகிவிட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட இவ்விரு கட்சிகளும் கிடைத்துள்ள வெற்றிக்காகவும் சண்டை போட்டு, கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டுபண்ணும் வகையில் போராட்டம் நடத்தியுள்ளன.
பாமக வேட்பாளர் பெற்ற வெற்றியை அதிமுக வெற்றிபெற்றிருப்பதாக முறைகேடாக அறிவித்து விட்டதாகக் கூறி பாமக வேட்பாளர் மணிமாறனும் அவரது ஆதரவாளர்களும் சென்னை-பெரிய பாளையம் நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லா புரத்தில் ஒன்றிய கவுன்சிலர் பத விக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் 1,455 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாகவும் கூட்டணிக் கட்சியான பாமகவின் சார்பில் போட்டியிட்ட மணிமாறனுக்கு 1,283 வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்ப தாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெற்றியை அதிமுக முறைகேடாகப் பயன்படுத்தி உள்ளதாகக் கூறி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட, போலிசாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டம் கலைந்தது.