லஞ்சம் வசூலிக்கும் அதிகாரிகள்; லாரி உரிமையாளர்கள் புகார்

ஓசூர்: தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமான பண வசூல் வரம்பு மீறிவிட்டதாகவும் தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்சம் புரையோடிவிட்டதாகவும் தமிழக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சில நெடுஞ்சாலைகளில் அதிகாரிகளே லஞ்ச வசூல் படையை அமைத்து செயல்படுகிறார்கள் என்றும் அவர்கள் பரபரப்பாகக் குற்றம் சுமத்தி இருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விழித்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்தச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். லஞ்ச வேட்டையில் ஈடுபடும் சில அதிகாரிகளின் பெயர்களையும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜுஜுவாடி என்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலகச் சோதனைச்சாவடி அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் உள்ளது.

அங்கு ஆய்வாளராகப் பணியாற்றும் சந்திரன் என்பவர் லஞ்சப் படையையே அமைத்துச் செயல்படுகிறார் என்று புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

அண்மையில் இந்தச் சோதனைச்சாவடி வழியாக சென்ற லாரிகளைச் சிலர் வழிமறித்து சட்டவிரோதமாக பணம் வசூல் செய்துகொண்டிருந்தனர். அதைப் பார்த்த புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் செந்தில்குமரன், அது பற்றி ஆய்வாளர் சந்திரனிடம் விசாரித்தார். லாரிகளிடம் இருந்து சட்டவிரோதமாகப் பணம் வசூல் செய்தவர்கள், ஆய்வாளர் சந்திரனால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இதில் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தலையிட்டனர். இதனையடுத்து வசூலிக்கப்பட்ட லஞ்சத் தொகை லாரி ஓட்டுநர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

இப்படி பல நெடுஞ்சாலைகளிலும் நடப்பதாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் கூறுகிறார்கள்.

ஜுஜுவாடி வட்டாரத்தில் லஞ்ச வசூலை எதிர்த்து அதைத் தட்டிக்கேட்ட லாரி உரிமையாளர்கள் மீது ஜுஜுவாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வழக்குத் தொடுக்க முடிவு செய்து இருப்பதாகவும் இது இன்னும் கொடுமையான ஒரு விவகாரம் என்றும் லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் லஞ்சத் தொகை நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் இருக்கும் என்று அவர்கள் குறிப்பிடு கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!