கோவை: பொள்ளாச்சியில் ஃபேஸ்புக்கில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களைப் பகிர்ந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதானார்.
இவரிடம் இருந்து கைபேசி உள்ளிட்ட பலவும் பறிமுதல் செய்யப்பட்டன. போக்சோவின் கீழ் வழக்குப் பதியப்பட்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனியார் கல்லூரியில் வாகன ஓட்டுநராகப் பணிபுரியும் கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரும் பிடிபட்டார். இவர் ஃபேஸ்புக்கில் குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பதிவிட்டது தெரியவந்தது.