வடமாநிலத்தவர்களின் கடைகளுக்குப் பூட்டு போட்டு பொதுமக்கள் எச்சரிக்கை

வடமாநிலத்தவர்களின் கடைகளுக்குப் பூட்டு போட்டு பொதுமக்கள் எச்சரிக்கை

1 mins read

தஞ்சை: தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநிலத்தவர்களின் கடைகளுக்கு அடையாளம் தெரியாத சிலர் பூட்டுப் போட்டுள்ள சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூட்டு போட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களைத் தமிழகத்தை விட்டு வெளியேறும்படி சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் வடமாநிலத்தவர்கள் சிலர் இனிப்பு மற்றும் இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலையில் அவர்களின் கடைகளில் பூட்டுகள், சுவரொட்டிகள் தொங்கவிட்டு உள்ளுர்க்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதனால், வடமாநிலத்தவர்கள் தங்கள் கடைகளைத் திறக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இரவில் அவர்களின் கடைகளுக்கு பூட்டுப் போட்டதால் இதுகுறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.