வேப்பூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்புலியூர் சிலோன் காலனியில் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு செல்வராஜ், வெள்ளைசாமி உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர். இதில் செல்வராஜ் 197 வாக்கு
கள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் வெள்ளைசாமி 196 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்திருந்தார். எனவே மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற வெள்ளைசாமியின் கோரிக்கையை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
எனவே அவரது ஆதரவாளர் கள் இருவர் தீக்குளிக்க முயன்றனர். உடனே அவர்களைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.