சென்னை: சென்னை உயர் நீதிமன் றத்தில் நேற்று முன்னிலையான பிராணா சாமி, “எனது சொந்த விருப்பத்தின்படியே ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும் சட்டவிரோதமாக தன்னை யாரும் அடைத்து வைக்கவில்லை,” என்றும் நீதிபதிகளிடம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து பிராணாசாமியின் தாய் தொடர்ந்த மனு தள்ளுபடியானது.
ஈரோட்டைச் சேர்ந்த பல் மருத்துவர் முருகானந்தம் கடந்த 2003ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். அவருக்கு ‘பிராணாசாமி’ என பெயரும் மாற்றி சூட்டப்பட்டது.
இந்நிலையில், நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தனது மகன் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவரை உடனே மீட்டுத்தர வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அங்கம்மாள் ஆட் கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.