ஆளுநருடன் வாக்குவாதம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சென்னை: 2020ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மேகதாது, குண்டாறு, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்தும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.

ஆளுநரின் உரை தொடங்கிய போதே குறுக்கிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து தாங்களும் பேச அனுமதிக்கவேண்டும் என்று வலி யுறுத்தி வாக்குவாதம் செய்தார்.

“முக்கிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கு மட்டுமே சட்ட சபையைப் பயன்படுத்துங்கள்,” என அறிவுறுத்தினார்.

எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஸ்டாலின் தலைமையில் அவர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், ஆளுநரின் உரை யைப் புறக்கணித்து சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

அவர்கள் அவையை விட்டு வெளியேறுவதை பொருட்படுத்தாத ஆளுநர் தொடர்ந்து பேசினார்.

“இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கு வதற்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.

தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுவதை தடுப்ப தற்கு மத்திய அரசை வலியுறுத்து வோம்.

காவிரி - குண்டாறுகளை ஒன்றாக இணைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 50.80 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்படும்.

டெங்கி, மலேரியா, சிக்குன்குனி யாவைத் தடுக்க அனைத்து தரப்பு மக்களுக்கும் விலையில்லா கொசுவலைகள் வழங்கப்படும் என்று பேசினார்.

நாட்டில், மாநிலத்தில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து பேச அனுமதிக்காதது வெளிநடப்புக்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“மக்களை பிளவுபடுத்தும் குடி யுரிமை சட்டம் பற்றியோ, தமிழக த்தின் தொழில் வளர்ச்சி குன்றியுள்ளது பற்றியோ, பொருளா தார ரீதியான வீழ்ச்சியை பற்றியோ, வேலைவாய்ப்பின்மை பற்றியோ எதுவுமே பேசாமல் ஏதோ ஒரு சம்பிரதாயத்துக்காக பேசுவது போல ஆளுநரின் உரை உள்ளது. ஊழல் என்பதே நோக்கம், பாஜகவின் பாதம் தாங்குவது பரமசுகம் என நடக்கும் அதிமுக ஆட்சியில் ஆளுநர் உரையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதால் வெளிநடப்பு செய்துள் ளோம்’ என விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ‘திமுக விவாதம் பல இடங்களிலும் இப்படி வெளிநடப்பு செய்தே வந்திருப்பதாகவும், இது புதிதல்ல என்றும் பேசிக் கொள்வதாக கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!