திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஏடிஎம்மில் பணம் வராமல் போன ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உதைத்து, அதன்மீது கல்லைத் தூக்கிப்போட்டு உடைத்த லாரி ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
வத்தலக்குண்டில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு வந்த லாரி ஓட்டுநர் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றபோது, அதில் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த லாரி ஓட்டுநர் ஏடிஎம் இயந்திரத்தை காலால் உதைத்து, அருகில் இருந்த கல்லை ஏடிஎம் இயந்திரத்தின் மீது தூக்கிப்போட்டு சேதப்படுத்தினார். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் கைதானார்.