அத்திக்குளம்: விருதுநகர் மாவட்டம், அத்திக்குளம் - தெய்வேந்திரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரதிவிராஜன் என்பவர் தோல்வியடைந்த நிலையில், “பணத்துக்காக உங்கள் வாக்குகளை விற்ற, பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி,” என சுவரொட்டி அடித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேபோல் அத்திக்குளம் - செங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காசி என்பவரும் தோல்வியடைந்த நிலையில், “தம்மை தோல்வியடையச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி,” என சுவரொட்டி அடித்து ஊரெங்கும் ஒட்டியுள்ளார்.